கீர்த்தி சுரேஷ் இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா

‘மெட்ராஸ்’ படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கேத்ரின் தெரசா. இதில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து கேத்ரினுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ள ‘கணிதன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது இவர் சிம்புவுக்கு ஜோடியாக ‘கான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தையடுத்து கேத்ரின், விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க தேர்வு செய்யப்பட்டது. பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகினார். இதையடுத்து படக்குழுவினர் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசாவை தேர்வு செய்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது.