பிரதமர் தலைமையில் 2300 பேருக்கு காணி உறுதிகள்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2300 பேருக்கு காணி உறுதிகள் இன்றைய தினம்(13) வழங்கப்படவுள்ளன.

அனைவருக்கும் நிழல் என்ற வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் காணி உறுதிகள் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று(13) நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு காணி உறுதிகள் கையளிக்கப்படவுள்ளன. இவ்வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 2300க்கும் அதிகமான குடும்பங்கள் இன்று(13)
நன்மை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , சாலாவ வெடி விபத்தினால் வீடுகளை இழந்த 800 குடும்பங்களுக்கும் வீடமைப்பு கடன்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் இன்று(13) நடைபெறவுள்ளது. இந்த பயனாளிகளுக்கான கடன் வசதிகள் தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் ஊடாக வழங்கி வைக்கப்படும் என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.