உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களுக்கு கட்டுபாட்டு விலை…

தேங்காய் எண்ணெய் மற்றும் உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் வேறு எண்ணெய்களுக்கான கட்டுபாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

தேங்காய் எண்ணெயினூடாக விற்பானையாளர்கள் இலாபம் அடைவதாகவும் இதனால் பாவணையாளர்களுக்கு எவ்வித இலாபமும் இல்லை என அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கவனம் செலுத்தி, இன்று(14) கூடவுள்ள வாழ்க்கை செலவு குழுவில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி தேங்காய் எண்ணெய்க்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.