கொழும்பு – வடக்கு ரயில் சேவை மட்டு…

பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம்புரண்டமை காரணமாக வடக்கு ரயில் சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி இடம்பெறும் ரயில் சேவைகள் அனுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் சேவைகள் மதவாச்சி வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தறையிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த நகர்சேர் ரயில், மதவாச்சிக்கும் – பரசங்கஸ்வெவவிற்கும் இடையிலான பகுதியில் நேற்று முன்தினம் தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.