மலேசிய பிரதமர் நஜீப் மீது ரூ.4300 கோடி ஊழல் புகார்

மலேசிய பிரதமராக நஜீப் ரசாக் பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஒரு பத்திரிகை ஊழல் புகார் தெரிவித்துள்ளது. அதில் அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணம் நஜீப்பின் சொந்த வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அது போன்று ரூ.4300 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே, அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் இதை பிரதமர் நஜீப் ரசாக் மறுத்துள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

(riz)