ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் வென்காய் சாங் இன்று(22) இலங்கை வருகை தரவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பல்வேறு உயர்மட்ட அரச திணைக்க பிரதானிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மையப்படுத்தி குறித்த இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் 25ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
####