கோப் குழுவின் தலைவரை பதவி விலகுமாறு ஐ.தே.கட்சி கோரிக்கை..

கோப் குழுவின் தலைவரான மக்கள் விடுதலை முன்னிலையின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி அந்த பதவியில் இருந்து உடன் விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று(22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் துஸார இந்துநில் குறித்த இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

“..நல்லாட்சி அரசில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோரது பரிந்துரையில் கோப் குழுவிற்கு சுனில் ஹந்துநெத்தி தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோப் குழுவில் அங்கம் வகிப்பதற்கு அஜித் பீ பெரேரா தகுதியானவர் இல்லை என்றால், அவரால் பரிந்துரைக்கப்பட்ட சுனில் ஹந்துநெத்தி எவ்வாறு அதில் அங்கம் வகிக்க முடியும்.

கடந்த ஆட்சியில் அர்ஜூன் அலோசியஸ் மத்திய வங்கியில் பாரிய கொள்ளையை மேற்கொண்டுள்ளார். அதனுடன் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி பேர்ப்புச்சுவல் சொத்து முகாமைத்துவ தனியார் நிறுவனத்தினால் ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்திற்கு 15 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவை குறித்த முழுமையான விசாரணைகள் இடம்பெற வேண்டும்..” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

####