க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுஹுருபாயவில் இந்த சேவையினைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள், விண்ணப்பித்தும் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்ய வேண்டியவர்கள் இந்த ஒருநாள் சேவையின் மூலம் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், இதற்கான கட்டணமாக 1000 ரூபாய் அறவிடப்படும் என்றும் ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
#rizmira