வட மாகாணத்தின் அரச பேருந்து பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(29) தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வட பிராந்திய பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும்(29) இந்த போராட்டம் தொடர்வதாக, வவுனியா பேருந்து சாலையின் நேரக் கட்டுப்பாட்டாளர் ஜெசிகரன் தெரிவித்துள்ளார்.