எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கு டிசம்பர் 15ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சிக்கல்கள் காணப்படாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் கடைசியில் தேர்தல் நடத்தப்படும்.
இந்நிலையில் குறித்த தேர்தலின் போது தேர்தல் கடமையில் ஈடுபடும் ஊழியர்கள், அரசாங்க ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துச் சேவை ஊழியர்கள், ரயில் திணைக்கள ஊழியர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் உள்ளிட்டோர் குறித்த தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி நள்ளிரவுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்ற அனைத்து வாக்காளர்களின் விபரங்களும் அந்தந்த பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#####