நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்று(30) முழுவதும் தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60Km வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வாகனங்களுக்கிடையில் சுமார் 50m அளவில் இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாகனத்தின் முன்பக்க விளக்கை எரிய விட்டு வாகனத்தை செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
####..