ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் நாங்கார்ஹர் மாகாண தலைநகரான ஜலலாபாத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு வெளியே நேற்று(03) மாலை மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி, கூட்டமான மக்கள் பகுதி அருகே வந்து, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், மைதானத்தில் உள்ளே அரசு ஆதரவு கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.