சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள். குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை மேற்கொள்ளும் முன், அதை கையின் சிறு பகுதியில் தடவி ஊற வைத்து, பின் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் இருந்தால் மேற்கொள்ளுங்கள்.
எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய்:
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட்டை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
* பின் அதை கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
* இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள கருமை முற்றிலும் போய்விடும்.
எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள்:
* 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின் அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
* இந்த கலவையை வாரத்திற்கு 2 முறை சருமத்தில் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் தயிர்:
* அடுத்ததாக 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, கருமையாக இருக்கும் சருமப் பகுதியில் தடவி 5 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவுங்கள். பின் ரோஸ் வாட்டர் போன்ற டோனரால் சருமத்தைத் துடையுங்கள்.
* இந்த முறையை தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை முற்றிலும் போக்கலாம்.
எலுமிச்சை சாறு, கடலை மாவு மற்றும் தேன்:
* 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பாதிக்கப்பட்ட பகுதியை நீரால் முதலில் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு தயாரித்து வைத்துள்ள கலவையை தடவுங்கள்.
* பின்பு 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
* இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள கருமை விரைவில் மறையும்.
எலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி:
* 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சிறிது பப்பாளி பழக்கூழ் சேர்த்து கலந்து, சருமத்தில் கருமையாக உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.
* இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், கருமை வேகமாக போய்விடும்.