உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு தேர்தல்கள் ஆணையகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பெப்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் தினமொன்றை அறிவித்துள்ளது.
குறித்த மனு ஈவா வனசுந்தர, சிசிர டி ஆப்றூ மற்றும் மலல்கொட ஆகிய மூவர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோஹன ஹெட்டியாராச்சி சார்பாக முன்னிலையாக சட்டத்தரணி நீதிமன்றத்தில் விவாதிக்கையில், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தற்போது அறிவித்தல்களை விடுத்துள்ள போதும் அதனை தாமதப்படுத்துவதற்காக பல தரப்பினர் தயாராகி வருவதாக குறிப்பிட்டார்.
#reeshma