யாழ். சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனம்தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(04) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், நபர் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில, சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.