கல்கமுவ தல பூட்டுவா யானை கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகள் ஆரம்பம்…

கல்கமுவ தல பூட்டுவா யானையை கொலை செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துளளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று நேற்று(04) கல்கமுவ பிரதேசத்திற்கு சென்றதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பளாளர் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

தல பூட்டுவா யானை கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்படும் வரை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 8 பேரும் எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒரு சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளதுடன், தான் மற்றொரு சந்தேகநபருடன் சென்று இறந்த நிலையில் காணப்பட்ட யானையின் இரு தந்தங்களையும் வெட்டி எடுத்துச் சென்றதாக சாட்சியளித்துள்ளார்.