மட்டக்களப்பில் கரையொதிங்கிய பாம்புகள் தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வு…

மட்டக்களப்பு கரையோரத்தில் பெருமளவிலான பாம்புகள் கரையொதிங்கியமைக்கான காரணம், கடல் நீரில் உள்ள வெப்பத்தன்மையே காரணம் என்று நாரா நிறுவனம் கூறியுள்ளது.

இருப்பினும் இது குறித்து தற்போது விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பாம்புகள் மட்டக்களப்பு மீனவர்களின் வலையில் சிக்கியிருந்ததாகவும் இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நாரா நிறுவனத்திற்கு கடற்தொழில் அமைச்சு நேற்று(04) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.