பாசிப்பருப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் கரும்புள்ளி, சுருக்கம், கருமை ஆகியவை மறைந்து சருமம் பிரகாசமடையும். கூந்தலை அழுக்கில்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க பாசிப்பருப்பு உதவி செய்கின்றது.
நிறைய பேருக்கு பாசிப்பருப்பை அழகிற்கு பயன்படுத்த தெரியவில்லை. அதனாலேயே அதனை அழகிற்காக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். முதலில் பாசிப்பருப்பை நன்றாக பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பொடியிலிருந்து தினமும் உங்க சரும மற்றும் கூந்தல் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தத் தொடங்குங்கள்.
சீரில்லாத சருமம் :
வயது அதிகமாக அதிகமாக சருமம் மேடு பள்ளமாக , முகத்தில் சீரில்லாத நிறத்துடன் இருக்கும். இதற்கு பாசிப்பருப்புபை பொடி செய்து கொள்ளுங்கள். தினமும் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் சிறிது ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். இது மிக மென்மையான சருமத்தையும், அழகையும் உங்களுக்கு தரும்.
முகப்பரு 1/2 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். தினமும் இரு வேளை அல்லது இரவில் தினமும் இப்படி செய்து தூங்கினால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மறைந்துவிடும். அதன் தழும்புகளும் மறையும்
நிறத்தை அதிகரிக்க :
1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் செய்ய வேண்டும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து கொள்ள வேண்டும்.
கருமைக்கு :
சூரிய ஒளியால் கருமையாகிப் போன சருமத்தை மாற்ற பாசிப்பருப்பால் முடியும். 1/2 ஸ்பூன் பாசிப்பயறு, கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து, கெட்டியாக இருந்தால் சிறிது நீர் கலந்து முகத்தில் தடவுங்கள். இது விரைவில் கருமையை போக்கி முகத்தை பளிச்சென்று மாற்றும்.
கூந்தலுக்கு :
1 ஸ்பூன் பாசிப்பருப்புப் பொடியுடன் கால் கப் நெல்லிக்காய் ஜூஸ் கலந்து கூந்தலின் வேர்க்கால்களில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை இந்த முறையை பயன்படுத்தினால் கூந்தலின் வேர்க்கால்களில் உள்ள பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியமான முடிக்கற்றைகள் வளரும்.
சுருக்கங்கள் மறைய :
சுருக்கம் மறைய பாசிப்பருப்பு அட்டகாசமான நன்மையை தரும் என்பதில் சந்தேகமில்லை. பாசிப்பருப்பு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதில் பேஸ்ட் ஆகும் வரையில் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து போன்ற பகுதில் மேல் நோக்கி தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக நீங்கள் இருப்பீர்கள்.