தெற்கு அதிவேக வீதியில் கொக்மாதுவ மற்றும் இமதுவவிற்கும் இடையே இன்று(06) காலை ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசல் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
பாரவூர்தி ஒன்று பாதை வேலியில் மோதியதன் காரணமாக மாத்தறையிலிருந்து வரும் வாகனங்கள் கொக்மடுவவிலிருந்து இமதுவ வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து பாரவூர்தி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.