ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிறப்பு கூட்டம் இன்று..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சிறப்பு கூட்டம் ஒன்று இன்று(06) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்காலத்தில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்படவுள்ள மக்கள் சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூட்டு எதிர்கட்சியை அங்கத்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.