வீங்கிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா? இதை ட்ரை பண்ணிப்பாருங்க…

கண் வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெற பல பயனுள்ள வழிகள் காணபடுகின்றன. இவ்ழிமுறைகள் பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கண் வீக்கத்தை குறைக்கிறது.

குளிர்ந்த ஸ்பூன்கள்:
வெறுமனே 2 ஸ்பூன்களை குளிர்சாதனப் பெட்டியில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்து வெளியே எடுக்கவும். அதை உங்கள் இரு கண்களின் மீதும் இலேசாக அழுத்தி 5 முதல் 7 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள்.
நீங்கள் வீங்கிய கண்களுடன் கண் விழிக்கும் போதெல்லாம் இந்த வழிமுறையை முயற்சி செய்து பாருங்கள்.

முட்டையின் வெள்ளைக் கரு:
முட்டையிலிருந்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்தெடுத்து அதை மென்மையாக உங்கள் கண்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவலாகத் தடவுங்கள். 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள்.

தேநீர் பைகள்:
இது கண் வீக்கத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் கருத்த சருமத்தையும் நிறத்தை இலேசாக்குகிறது. 2 தேநீர் பைகளை மூடிய கண்களின் மீது வைத்து சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். பிறகு கவனமாக இளஞ்சூடான நீரில் கழுவுங்கள்.

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை இரண்டு வில்லைகளாக வெட்டி அதை உங்கள் கண்கள் மீது வையுங்கள். அதை 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பிறகு ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து கண்களைத் துடைத்து விடுங்கள்.

குளிர்ந்த தண்ணீர்:
வீக்கத்தை குறைப்பதில் குளிர்ந்த நீர் ஒரு நிவாரண காரணியாக செயல்பட்டு மேலும் அந்தப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வீக்கத்தை பெருமளவு குறைக்கிறது

உருளைக் கிழங்கு வில்லைகள்:
உங்கள் இரு கண்களின் மீதும் உருளைக் கிழங்கு வில்லைகளை வையுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள்.
அதன் பிறகு அந்தப் பகுதியை இளஞ்சூடான தண்ணீரில் கழுவி விடுங்கள். இந்த வழிமுறையை முயற்சித்துப் பார்த்து கண் வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறுங்கள். மேலும் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சருமத்தில் ஒரு புத்துணர்ச்சியை அடையுங்கள்.