மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 23 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை(08) அந்த ஆணைக்குழுவின் காலம் நிறைவடையவிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
பிணை முறி விநியோக அறிக்கை நாளைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
எனினும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, ஜனாதிபதியால் அந்த ஆணைக்குழுவின் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.