வெள்ளை புள்ளிகள் என்பது ஒரு சிறிய வடிவில் நெற்றி, தாடை, மூக்கு போன்ற இடங்களில் தோன்றி உங்கள் முக அழகையே கெடுத்து விடும். இந்த மாதிரியான புள்ளிகள் இறந்த செல்கள், நச்சு, தூசிகள் மற்றும் எண்ணெய் சீரம் போன்றவைகள் நமது சருமத் துளைகளை அடைப்பதால் உண்டாகிறது.
இந்த மாதிரியான பகுதிகளில் தோன்றும் வெண்புள்ளிகளை சில பொருட்களை கொண்டு எளிதாக நீக்கலாம்.
சந்தனம்:
1/2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடி உடன் 1 டீ ஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும் இந்த கலவையை உங்கள் மூக்கு, தாடை, நெற்றி போன்ற இடங்களில் 5 தேய்க்க வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இதை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
பேக்கிங் சோடா:
1/2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீ ஸ்பூன் தண்ணீர் உடன் கலந்து கொள்ளவும் பாதிப்படைந்த இடத்தில் இந்த கலவையை நன்றாக தேய்க்க வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு 2-3 தடவை இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
எலுமிச்சை:
எலுமிச்சை நறுக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். அதன் மேல் 3-4 சொட்டுகள் தேன் சேர்த்து கலக்கவும். இப்பொழுது அதை நெற்றி, தாடை போன்ற பகுதிகளில் தடவவும் பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும் தினமும் இதை செய்து வந்தால் வெள்ளை புள்ளிகள் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
கடலை மாவு:
1/2 டீ ஸ்பூன் கடலை மாவு, 1 டீ ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த கலவையை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும் பிறகு ஒரு ஈரமான துணியை கொண்டு துடைத்து எடுக்கவும் இதை தினமும் செய்து வந்தால் நல்ல ஆச்சரியமூட்டும் மாற்றத்தை காணலாம்
களிமண்:
1/2 டீ ஸ்பூன் பென்டோனைட் களிமண்ணுடன் 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும் இந்த கலவையை புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளே செய்யவும் பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும் இதை வாரத்திற்கு என்ற முறையில் செய்து வந்தால் எதிர்ப்பார்க்காத மாற்றத்தை காணலாம்
ப்ரவுன் சுகர்:
1/2 டீ ஸ்பூன் ப்ரவுன் சுகரை 1டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து கலக்கவும் இந்த கலவையை கொண்டு உங்கள் நெற்றி, தாடை போன்ற பகுதிகளில் நன்றாக தேய்க்க வேண்டும் பிறகு 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும் இந்த முறையை வாரத்திற்கு 3-4 தடவை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்