இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி – நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களின் திருமணம் இத்தாலியில் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், மற்றும் 3 டி20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இந்திய அணியின் தலைவர் விராட்கோலிக்கு ஒருநாள், மற்றும் டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 2-வது வாரத்தில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.