பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்..

அரசில் இருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகாவிடில், அவர்களுடன் இணையாதிருக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

நேற்று(06) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-reeshmaa