ரயில் சாரதிகள் சங்கத்துடன் ரயில்வே நிலைய அதிபர்களும் வேலை நிறுத்தத்தில்..

புகையிரத சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று(07) நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜகன பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தத் துறையினரின் சம்பள அதிகரிப்பானது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

-reeshmaa..