ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பயணிகளின் வசதி கருதி இன்று(08) காலை சில அலுவலக ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கண்டி, ரம்புக்கணை, பொல்கஹவெல, மஹவ, காலி, மாத்தறை, அவிசாவளை ஆகிய நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி ஒவ்வொரு ரயில் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. குறித்த ரயில்கள் 8.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு கோட்டையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் புதன் நள்ளிரவு ஆரம்பித்த வேலைநிறுத்தத்திற்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நேற்று(07) போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இது பற்றி பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ தொவிக்கையில் வேலைநிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும் இதன் மூலம் மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.