கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு மாணவர் காப்புறுதி தினத்தை முன்னிட்டு நுகேகொட அநுல வித்தியாலயத்தில் நேற்று(07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் அடுத்த ஆண்டு ஆரம்ப பகுதியில் சாதாரண தரத்தில் இருந்து உயர் தரத்திற்கு தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கு டெப் (TAB) வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-reeshmaa..