பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள போஹரா பகுதியைச் சேர்ந்த சுமார் 70 பேர், பிர் பதாய் என்ற பகுதியில் உள்ள சூஃபி மசூதியில் பண்டிகையை கொண்டாட படகில் சென்ற வேளையில் தாட்டா என்ற நகரம் அருகே எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் சென்று நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர்.அதிகளவிலான மக்கள் படகில் பயணித்தமை காரணமாகவே படகு கவிழ்ந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.