புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும், சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானியில் நேற்றிரவு(08) ஜனாதிபதி கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, இன்று(09) அதிகாலை புகையிரத சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவான வர்த்தமானி அறிவித்தல் அச்சுப்பதிப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தமது வேலை நிறுத்தமானது தொடர்ந்து முன்னெடுக்கடும் என புகையிரத சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
புகையிரத தொழிற்சங்கங்கள் இன்று(09) கூடி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாட உள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் ஆகியோர் கடந்த 7 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்தப் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
-reeshmaa..