எமனில் டி.வி. நிலையம் மீது சவுதி கூட்டுப்படை தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு…

எமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சனாவில், டி.வி. நிலையம் மீது சவுதி நிகழ்த்திய கூட்டுப்படைகள் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

எமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கும் இடையேயான கூட்டணியில் திடீர் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கடந்த வாரம் சலே கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து எமனில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சனாவில், டி.வி. நிலையம் ஒன்றின்மீது நேற்று முன்தினம் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.