பிரிட்டனில் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நீடிப்பதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் முடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, லண்டனில் நேற்று(10) நடைபெறவிருந்த ரக்பி விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேல்ஸ் அருகாமையில் இருக்கும் சென்னிபிரிட்ஜ் பகுதியில் 28 சென்டிமீட்டர் அளவிலும், லண்டன் அருகாமையில் உள்ள ஹை வைகோம்பே பகுதியில் 12 சென்டிமீட்டர் அளவிலும் பனி பெய்துள்ளது.
இங்கிலாந்தின் மத்திய பகுதியில் உள்ள பிர்மிங்ஹம் நகரில் இருந்து புறப்பட்டு செல்லும் 10 இற்கும் அதிகமான விமான சேவைகள் மற்றும் சில ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.