இன்று(12) முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகின்றன.
இதற்கமைய, 688,573 பாடசாலை மற்றும் தனியார் பரிட்சார்த்திகள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த நேரத்திற்கு முன்னதாகவே பரிட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பரீட்சை அனுமதிபத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை கட்டாயம் பரீட்சை நிலையங்களுக்கு எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5 ஆயிரத்து 116 மத்திய நிலையங்களில் இந்த முறை க. பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரயில் இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயிலில் பயணிக்கும் மாணவர்களுக்காக விசேட பேரூந்து சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.