ஜனாதிபதியுடன் சேர்ந்து நல்லாட்சிக்கான புதிய அரசைக் கட்டியெழுப்புவேன் – பிரதமர்

ஜனாதிபதி தேர்தல் அன்று ஆரம்பிக்கப்பட்ட புரட்சியை வெற்றியடைய செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்வரும் 05 வருடத்திக்குள் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே பிரதமர் இக்கருத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆதரவை பெற்றுக்கொள்வோம் என அவர் கூறியுள்ளார்.

இம்முறை தேர்தலில் நாங்கள் தனித்தனியாகயே போட்டியிடுவோம், எனினும் எங்களது அடிப்படை கொள்கையை பாதுகாத்துகொண்டு ஜனாதிபதியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம்.

எங்கள் நாட்டு மக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

சந்திரிக்கா குமாரதுங்க எங்கள் நாட்டின் ஜாதி, மதங்களுக்கு இடையில் இணைந்து செயற்பட்டுக்கொண்டுள்ளார்.

சிங்களம், தமிழ், முஸ்லிம், பேகர் மதங்கள் போன்று அனைத்து மத மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது. இதனை தீர்த்துக்கொள்ளாமல் முன்னோக்கி செல்ல முடியாது.

கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி புரட்சியை எதிர்வரும் 05 வருடங்களுக்குள் அனைவரும் இணைந்து வெற்றி பெற செய்வதே எங்கள் எதிர்பார்ப்பு.

ஜனவரி மாதம் 08ஆம் திகதி எங்கள் குழுவுக்கு ஒப்படைத்த நாட்டை இனி வரும் 05 வருடங்களில் சிறப்பான ஒரு நாடாக மக்கள் கையில் வழங்குவதே எங்கள் நோக்கம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)