நாட்டின் பல பகுதிகளிலும் நாளை(13) முதல் 18 ஆம் திகதி வரையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல், மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக , மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்வற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.