மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று(13) காலை அதிவேகமாக பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் பூண்டுலோயா- தொரண சந்தியில், மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.