கல்கமுவ பிரதேசத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த “தல புட்டுவா” என அறியப்பட்ட யானையை கொலை செய்த சம்பவத்தில் கல்கமுவ பிரதேச நீர்ப்பாசண நிறைவேற்று பொறியியலாளர் மற்றும் பொல்பித்திகம பிரதேச விகாரையின் விகாராதிபதி ஆகியோரை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
தல புட்டுவா எனப்படும் தந்தங்களையுடைய யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளில் வௌியான தகவல்களின் அடிப்படையிலேயே பொறியியலாளர் மற்றும் விகாராதிபதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட உள்ளனர்.
தல புட்டுவாவை கொலை செய்த மற்றும் அதன் தந்தங்களை விற்பனை செய்ய முற்பட்ட சம்பவத்தில் தற்போது 08 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
#####