ஶ்ரீயானி விஜயவிக்ரம உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவி பிரமாணம்…

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஶ்ரீயானி விஜயவிக்ரம இன்று(15) பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்த ஶ்ரீயானி விஜேவிக்ரம அண்மையில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து அரச தரப்புடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.