விரைவில் புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், தன் அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட நிவாரணங்கள் மாத்திரமே மீதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு தனது புதிய அரசு மீண்டும் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(riz)