முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை காய்ச்சல் குறித்து ஆராய, விஷேட வைத்தியக் குழுவொன்று அப் பகுதிக்கு சென்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் ஒருவகை காய்ச்சல் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் ஐவர் முல்லைத்தீவு வைத்தியசாலையிலும், நால்வர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தவேளை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் வட மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவலுக்கு அமைய, கடந்த 16ம் திகதி விஷேட வைத்தியக் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் தற்போது இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.