எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று(18) மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியூதினின் இணைப்புச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் குறித்த இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளிலும் மன்னார் நகர சபையிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தையே செலுத்தியுள்ளது.
####