முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் குறித்து ஆராய, விஷேட வைத்தியக் குழுவொன்று குறித்த பகுதிக்கு சென்றுள்ளது.
இம்மாதம் இதுவரையான காலப் பகுதியில் முல்லைத்தீவில் 9 பேர் இந்தக் காய்ச்சலால் பலியாகியுள்ளனர்.
இவர்களில் ஐவர் முல்லைத்தீவு வைத்தியசாலையிலும், நால்வர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலுமேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் வட மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவலுக்கு அமைய, கடந்த 16ம் திகதி விஷேட வைத்தியக் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.