இராஜகிரிய மேம்பாலம் ஜனவரி 09 இல் திறப்பு…

இராஜகிரிய மேம்பாலம், எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி, மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று(21) மேம்பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பிலான மேற்பார்வைக்காக சென்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கலந்துகொண்டார்.

மேலும், ராஜகிரிய மேம்பாலத்தின் 95 வீதமான நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலம் பயன்பாட்டுக்காக விடப்படும் நிலையில் பொரளை மற்றும் பத்தரமுல்லைக்கு இடையில் விசேட போக்குவரத்து ஓழுங்குகள் நடைமுறைப்படுத்தவும், ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள வீதிகளில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இராஜகிரிய மேம்பால நிர்மாணப் பணிகள் கடந்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.