அரிசி விற்பனையில் மீண்டும் கட்டுப்பாட்டு விலையை அறிமுகம் செய்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் 1Kg நாட்டசிரியின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 74/= ஆகும். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரண விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்காக சதொச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊடாக அரிசியை இறக்குமதி செய்வதென குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.