புதிய கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..

புதிய கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம் என் ரணசிங்க தெரிவித்தார்.

குறித்த இந்த கடவுச்சீட்டு சிவில் விமான சேவைகள் அமைப்பின் தரத்திற்கு அமைவாக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தயாரிப்பதற்காக அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

2018ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய கடவுச்சீட்டை அச்சிடுவதற்கு அமைச்சரவையினால் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் ரிலாறு என்ற பிரிட்டிஷ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.