தனஞ்சயவை ‘கழுதை’ என தகாத வார்த்தையால் நிந்தித்த திசரவுக்கு எதிராக சூடாகியது fb…

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது T-20 போட்டி இன்று(22) இடம்பெறவுள்ளது.

முன்னதாக கட்டாக்கில் இடம்பெற்ற முதலாவது T-20 போட்டியில் இந்திய அணி, அபார வெற்றியை பெற்று, 1:0 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெரும் எதிர்பார்ப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

இதேவேளை , நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 93 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்திருந்தது.

இந்நிலையில் , இந்த போட்டியில் இந்தியா அணி துடுப்பெடுத்தாடும் போது இறுதி ஓவரை வீசிய இலங்கை அணித் தலைவர் திசர பெரேரா , அகில தனஞ்சயவை ‘கழுதை’ என தகாத வார்த்தையால் நிந்தித்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

அணித்தலைவரின் குறித்த இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

#reeshma..