கெசல்கமுவ ஒயாவில் தேயிலை கழிவுகள்.. – விசாரணைகள் ஆரம்பம்..

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ, கெசல்கமுவ ஒயாவின் நீர் கறுப்பு நிறமாக மாறியமை தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று(22) விடியற் காலையில் கெசல்கமுவ ஒயா ஆற்று நீர் கறுப்பு நிறத்தில் செல்வதை அவதானித்த பிரதேச மக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் குறித்த கெசல்கமுவ ஒயா ஆற்றின் நீரில் என்ன கலக்கபட்டது என்பதினை கண்டறிவதற்கு பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேயிலை தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரினை கெசல்கமுவ ஒயா ஆற்றில் கலக்கபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரனமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை அமைக்கபட்டிருக்கும் பிரதேசங்களை பொலிஸார் பரிசோதனை செய்து வருவதோடு, குறித்த இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டவருகின்றனர் .

#reeshma..