இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 88 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு
260 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் , அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து தென்னாபிரிக்கா வீரர் டெவிட் மில்லரின் சாதனையை சமப்படுத்தியுள்ளார்.
ரோஹித் சர்மா 43 பந்துகளுக்கு 118 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.
10 ஆறு ஓட்டங்கள் மற்றும் 12 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
லோகேஸ் ராஹுல் 49 பந்துகளுக்கு 89 ஓட்டங்களைப் பெற்றார்.
ஹர்திக் பாண்டியா 3 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள்.
தோனி 28 ஓட்டங்கள்.
பந்து வீச்சில் திசர பெரேரா மற்றும் நுவன் பிரதீப் தலா இரண்டு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.2 ஓவர்கள் முடிவில் 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
7 ஆறு ஓட்டங்கள் மற்றும் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
உபுல் தரங்க 47 ஓட்டங்களையும் , நிரோசன் திக்வெல்ல 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மற்றைய அனைத்து வீரர்களுகம் 10 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏஞ்சலோ மெத்திவ்ஸ் உபாதை காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை.
பந்து வீச்சில் யுஷ்வேந்திர சஹால் 4 விக்கட்டுக்களையும் , குல்தீப் யாதவ் 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
அதன்படி இந்திய அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது.
அதன்படி , மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
####