இந்திய அணிக்கு எதிரான இறுதி T-20 போட்டியில் இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தூரில் நேற்று(22) இடம்பெற்ற இரண்டாவது T-20 போட்டியில், தமது இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை வீச தயாரானபோது, உபாதை காரணமாக போட்டியிலிருந்து அவர் இடைநடுவில் வெளியேறியதோடு, துடுப்பாட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பை இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.
####