தலபூட்டுவா’வின் உடற்பாகங்கள் DNA பரிசோதனைக்கு..

கல்கமுவ பிரதேசத்தில் தலபூட்டுவா யானையைக் கொலை செய்த சம்பவத்தின் சந்தேக நபர்கள் 9 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மஹவ மேலதிக நீதவான் ரசிக மல்லவாராய்ச்சி இன்று(26) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த யானையைக் கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி அரச இரசாயண பகுப்பாய்வாளருக்கும், தலபூட்டுவா யானையின் உடற்பாகங்கள் டீ.என்.ஏ பரிசோதனைக்காக பொரலை ஜின்டெக் நிறுவனத்துக்கும் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த இந்த சம்பவத்தின் அனைத்து சந்தேக நபர்களதும் தொலை​​பேசி தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கை தொடர்பான அறிக்கையினை இரகசியப் ​பொலிஸாருக்கு வழங்குமாறும், சகல தொலைபேசி நிறுவன முகாமையாளர்களுக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

#reeshmaa..